உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேனி மாவட்டத்தில் கனமழை பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Published On 2022-08-30 04:49 GMT   |   Update On 2022-08-30 04:49 GMT
  • தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது
  • நேற்று சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

கூடலூர்:

தேனி மாவட்டத்தில் கடந்த 1 வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரியாறு, வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரியகுளம், மஞ்சளாறு, தேவதானப்பட்டி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தேனி ரெயில் நிலையத்துக்குட்பட்ட தண்டவாளத்தில் ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி பாதையை சீரமைத்தனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 135.60 அடியாக உள்ளது. வரத்து 969 கன அடி. திறப்பு 1866 கன அடி. இருப்பு 6017 மி.கன அடி.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 69.42 அடியாக உள்ளது. வரத்து 1784 கன அடி. திறப்பு 2069 கன அடி. இருப்பு 5681 மி.கன அடி. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 55 அடி. வரத்து 15 அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 126.37 அடி. வரத்து 40 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

பெரியாறு 7.2, தேக்கடி 23.8, கூடலூர் 4.6, உத்தமபாளையம் 10.7, வீரபாண்டி 8.2, வைகை அணை 3, மஞ்சளாறு 4, சோத்துப்பாறை 6, ஆண்டிபட்டி 7.2, அரண்மனைபுதூர் 14, போடி 3.6, பெரியகுளம் 15 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News