உள்ளூர் செய்திகள்

சின்னார் அணை திறக்கப்பட்டதால் கால்வாயில் தண்ணீர் சீறிபாய்ந்து ஓடிய காட்சி.

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: பஞ்சப்பள்ளி சின்னார் அணையில் இருந்து 400 கனஅடி உபரி நீர் திறப்பு

Published On 2022-08-05 09:40 GMT   |   Update On 2022-08-05 09:40 GMT
  • 50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 48 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.
  • இந்த அணைக்கு வினாடிக்கு 1100 கனஅடிநீர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னார் அணையின் நீர்பிடிப்பு பகுதியான அஞ்செட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி பெட்ட முகிலாலம், ஐயூர், தேன்கனிக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்த அணை எப்போது வேண்டுமானாலும் முழு கொள்ளளவை எட்டும் என்பதால் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 48 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 1100 கனஅடிநீர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் பாதுகாப்பு கருதி நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அணையில் இருந்து இன்று காலை வினாடிக்கு 400 கனஅடி நீர் திறந்து வைத்தனர்.

இந்த நீர் கால்வாயில் தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடியது.

இதனால் பஞ்சப்பள்ளி, சாமனூர், மாரண்டஹள்ளி, அத்திமுட்லு, பாலக்கோடு, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4,500 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறும் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால் நீர்நிலைகள் உயரும்.

ஆகவே இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News