உள்ளூர் செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு- பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.6 ஆக சரிவு

Published On 2023-03-01 07:02 GMT   |   Update On 2023-03-01 07:02 GMT
  • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.
  • கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று 50 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது.

போரூர்:

ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் வெங்காயம் விளைச்சல் தொடர்ந்து அதிகரித்து உள்ளது.

இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிர மாநிலத்தில் பார்ஷி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை மொத்த சந்தையில் கிலோ ரூ.1-க்கு விற்கும் நிலை ஏற்பட்டது. இதில் லாரி வாடகை, சுமை கூலி உள்ளிட்ட செலவுகள் போக அவருக்கு கிடைத்தது ரூ.2-மட்டுமே. விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அரசு இதில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. தினசரி 40 லாரிகள் வரை வெங்காயம் வருவது வழக்கம். தற்போது வெங்காய சீசன் தொடங்கி பரவலாக விளைச்சல் அதிகரித்து இருப்பதால் கடந்த சில நாட்களாகவே அதன் வரத்து அதிகரித்து உள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று 50 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது. இதனால் வெங்காயம் விலை சரிந்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ வெங்காயம் ரூ.6 முதல் விற்கப்பட்டது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரகத்தை பொறுத்து ரூ.10 முதல் விற்கப்படுகிறது. இதேபோல் மொத்த விற்பனை கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.45 வரை விற்பனை ஆனது.

Tags:    

Similar News