உள்ளூர் செய்திகள்

சேலத்தில் பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பு

Published On 2023-03-19 08:49 GMT   |   Update On 2023-03-19 08:49 GMT
  • பெரிய வெங்காய சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.
  • நடப்பாண்டில் அங்கு நன்றாக மழை பெய்ததால் விவசாயிகள் அதிகளவில் வெங்காயம் சாகுபடி செய்தனர்.

சேலம்:

மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெரிய வெங்காய சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டில் அங்கு நன்றாக மழை பெய்ததால் விவசாயிகள் அதிகளவில் வெங்காயம் சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை சீசன் தொடங்கியதை அடுத்து வழக்கத்தை விட அதிகமாக வெங்காயம் லோடு சேலம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

இதனால் சேலம் லீபஜார், பால் மார்க்கெட், கடைவீதி, ஆற்றோர காய்கறி, உழவர் சந்தைகள், தினசரி சந்தைகள், தனியார் சூப்பர் மார்க்கெட்டுகளில் வெங்காயம் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஓட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு அதிக அளவில் வெங்காயம் வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து வியாபாரி கள் கூறியதாவது:-

சேலம் மார்க்கெட்டுக்கு ஜனவரி மாதத்தில் தினமும் 100 டன் பெரிய வெங்காயம் வந்து கொண்டிருந்தது. தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் வரத்து 250 டன்னாக அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ.20 முதல் ரூ.35 வரை பெரிய வெங்காயம் கடைகளில் விற்கப்படுகிறது. அதேபோல் முதல் ரகம் 3 கிலோ ரூ.100-க்கும், 2-ம் ரகம் 4 கிலோ ரூ.100-க்கும், 3 ரகம் 5 கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags:    

Similar News