உள்ளூர் செய்திகள்

கெலவரப்பள்ளி அணையின் மதகுகள் வழியாக நுங்கும் நுரையுமாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்லும் காட்சி.

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணை ஆற்றில் குவியல், குவியலாக செல்லும் ரசாயன நுரைகள்

Published On 2022-10-06 09:57 GMT   |   Update On 2022-10-06 09:57 GMT
  • கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாதுகாப்பு கருதி 908 கன அடி நீர் தற்போது ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
  • ஆற்று நீரில் குவியல் குவியலாக இரசாயன நுரைகள் பொங்கி செல்கிறது.

ஓசூர்,

கர்நாடக மாநிலம் நந்தி மலை உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த 1-ம் தேதி கெலவரப்பள்ளி அணைக்கு 908 கன அடி நீர் வரத்தாக இருந்தது. இன்று 6 ஆம் தேதி 908 கன அடியாகவும் படிப்படியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும், அணையில் தற்போது 40.18 கன அடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாதுகாப்பு கருதி 908 கன அடி நீர் தற்போது ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் தென்பெண்ணையாற்றில் அதிக அளவு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

மழையை பயன்படுத்தி கர்நாடக மாநில எல்லைகளில் உள்ள தொழிற்சாலைகள ரசாயன கழிவுகள் அதிக அளவில் தென்பெண்ணையாற்றில் திறந்து விட்டு வருவதால் ஆற்று நீரில் குவியல் குவியலாக இரசாயன நுரைகள் பொங்கி செல்கிறது.

தென்பெண்ணை யாற்றில் அதிக அளவு தண்ணீர் வரும்போது ரசாயன கழிவுகள் திறந்து விடப்படுவதும் ஆற்றில் குவியல் குவியலாக ரசாயன கழிவுகள் செல்வதும் தொடர்கதையாக உள்ளது. இவ்வாறு ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News