உள்ளூர் செய்திகள்

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை

Published On 2023-04-21 10:18 GMT   |   Update On 2023-04-21 10:18 GMT
  • மார்ச் மாத இறுதியில் முதல் மற்றும் 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தி வருகின்றனர்.
  • ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை பெற நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநகராட்சி சட்ட விதிமுறைகளின் படி ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடங்கும் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுகளுக்கான சொத்து வரியை அரையாண்டு ஆரம்பித்த 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

ஆனால் வரி விதிப்பு தாரர்கள் பெரும்பாலும் செப்டம்பர், மார்ச் மாத இறுதியில் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தி வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டிலும் முதல் 30 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்தி 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை பெற நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் நடைமுறைக்கு வந்துள்ளது.

எனவே தஞ்சை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து வரி விதிப்பு தாரர்களுக்கு 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் அதிகளவில் சொத்து வரியை மாநகராட்சிக்கு செலுத்தி பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News