உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி புனித அந்தோனியார் அரசு உதவி நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு திறப்பு விழா

Published On 2023-02-26 09:25 GMT   |   Update On 2023-02-26 09:25 GMT
  • தலைமை ஆசிரியை மோட்ச அலங்காரம் வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
  • முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துக் கொண்டனர்

கோத்தகிரி,

கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகும்.

இந்த பள்ளி தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த மாதம் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1985 ஆம் ஆண்டு 8ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் ரூ.1½ லட்சம் மதிப்பில் பள்ளிக்கு நவீன வசதிகளுடன், ரெக்கார்டிங் வசதி கூடிய தொடுதிரை ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டு இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை மோட்ச அலங்காரம் தலைமை வகித்து, வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பள்ளி நூற்றாண்டு விழா கமிட்டியை சேர்ந்த சசிகுமார், சந்தோஷ், ஓய்வு பெற்ற ஆசிரியைகள் மீராபாய், அமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாணவர்கள் முகமது அலி, ராவணன், மைதிலி, சாதிக் அலி, நாகராஜ், பரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து சென்னையை சேர்ந்த பொறியாளர் கார்த்திகேயன் ஸ்மார்ட் வகுப்பறையின் சிறப்பு அம்சங்கள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தார். மேலும் கடந்த 37 வருடங்களுக்கு முன் இந்த பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கு நவீன ஸ்மார்ட் வகுப்பறை மட்டுமின்றி, தினமும் பள்ளியில் குழந்தைகள் திருக்குறள் எழுதி வைக்கும் வகையில் திருவள்ளுவர் சிலை மற்றும் ஒயிட் போர்டு ஆகியவற்றையும் அளித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் சுந்தர் நன்றி கூறினார் 

Tags:    

Similar News