உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்


புல்லுக்காட்டு வலசையில் கிராமிய சேவை திட்ட தொடக்க விழா

Published On 2022-09-12 09:31 GMT   |   Update On 2022-09-12 09:31 GMT
  • உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் ஷோஹோ நிறுவனம் இணைந்து புல்லுக்காட்டு வலசையில் கிராமிய சேவை திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
  • திட்டத்தில் மனநல ஆலோசனை முகாம், மருத்துவமுகாம், ஆரோக்கியம் மேம்பாட்டு முகாம், சுற்றுப்புற சுகாதார முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் ஆகியவை நடைபெற்றது.

தென்காசி:

உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் ஷோஹோ நிறுவனம் இணைந்து புல்லுக்காட்டு வலசையில் கிராமிய சேவை திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

புல்லுக்காட்டு வலசையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஷோஹோ நிறுவன முதன்மை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தலைமை தாங்கினார்.

உலக சமுதாய சேவா சங்க திருநெல்வேலி மண்டல தலைவர் அண்ணாமலையார் வரவேற்றார்.

ஷோஹோ நிறுவன அலுவலர் கீர்த்தி வாசன், உலக சமுதாய சேவா சங்க இணை இயக்குனர்கள் ராசாசுடலைமுத்து, பாலமுருகன், ஒருங்கிணைப்பாளர் குருரங்கதுரை, திருநெல்வேலி மண்டல செயலாளர் அரசுஈஸ்வரன், மண்டல துணைத் தலைவர் சுடலையாண்டி, குற்றாலம் மனவள கலை மன்ற செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேவா சங்க இயக்குனர் முருகானந்தம் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாடசாமி மற்றும் பலர் பேசினர்.

அருமைக்கலை க்காரியாலயம் குழுவினரின் விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் குணராமநல்லூர் பஞ்சாயத்து தலைவி சுபா சக்தி, கீழப்பாவூர் யூனியன் துணைத் தலைவர் முத்துக்குமார், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொன்னுத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தில் மனநல ஆலோசனை முகாம், மருத்துவமுகாம், ஆரோக்கியம் மேம்பாட்டு முகாம், சுற்றுப்புற சுகாதார முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் ஆகியவை நடைபெற்றது.

Tags:    

Similar News