உள்ளூர் செய்திகள்

ஊரக வேளாண் பணி அனுபவம் குறித்த தொடக்க விழா நடைபெற்றது.

ஊரக வேளாண் பணி அனுபவ தொடக்க விழா

Published On 2022-10-05 09:49 GMT   |   Update On 2022-10-05 09:49 GMT
  • அண்ணாமலை பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவிகள் சார்பில் ஊரக வேளாண் பணி தொடக்கம்.
  • மாணவிகள் விவசாயிகளிடம் விவசாயம் செய்யும் அனுபவத்தை பெற்றனர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் ஊராட்சி, நல்லூர் கிராமத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவிகளின் ஜி 8 குழுவின் சார்பில் ஊரக வேளாண் பணி அனுபவம் குறித்த தொடக்க விழா நடைபெற்றது.

விழாவிற்கு வேளாண்புல இணைப்பேராசிரியர் முனைவர் காளிதாசன் தலைமை வகித்தார்.

வேளாண்துறை உதவிப் பேராசிரியர்கள் முத்துக்குமார், மாதவன், வனிதா முருகானந்தம் முன்னிலை வகித்தனர்.

இயற்கை விவசாயி ஆனந்தநடராஜன், வேளாண் உதவி இயக்குநர் எழில்ராஜா, வேளாண் உதவி அலுவலர் கொளஞ்சிநாதன், கிராம நிர்வாக அலுவலர் மதியழகன், பத்திரிகையாளர் முத்து மற்றும் விவசாயிகள், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாணவிகள் கிராமத்தில் தங்கி ஒரு மாத காலத்திற்கு விவசாயிகளிடம் இருந்து விவசாயம் செய்யும் அனுபவத்தை பெற்றும் மாணவிகள் கற்ற கருத்துக்களை அவர்களிடம் தெரிவித்தும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News