உள்ளூர் செய்திகள்

பரிசாக பெற்ற பேனாவுடன் குழுப்படம் எடுத்து கொண்ட ஆசிரியர்கள், மாணவர்கள்.

அரசு பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

Published On 2023-07-06 09:58 GMT   |   Update On 2023-07-06 09:58 GMT
  • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
  • தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் என்றார்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமலிங்கம், ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபீக், ஆசிரியர்கள் தெய்வ சகாயம், தமிழ்ச்செல்வி, உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர் சிவராமன் வரவேற்றார்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் தேன் அமுத சொல்வேந்தர் சாகுல் ஹமீது இலக்கிய மன்ற விழாவினை தொடக்கி வைத்து பேசும்போது:-

இலக்கியம் என்பது விரிந்த பொருளில் எழுதிய அனைத்தையும் குறிக்கும்.

இந்த வரையறையின் கீழ் இலக்கியத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

தமிழ் இலக்கியம் சுமார் 2000 வருடங்கள் பழமையானது.

இலக்கிய வளமும் தொடர்ச்சியும் கொண்ட ஒரு மொழியாகும். எனினும், தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலானவை, இன்பியல் இலக்கியங்கள்.

தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் என்றார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் ஜூன் மாதம் விடுப்பு எடுக்காமல் வருகை புரிந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பேனாக்கள் பரிசாக வழங்கப்பட்டது.

இதில் ஆசிரியர்கள் விஜயகுமார், பாலசுப்பிரமணியன், பிரபாகரன், அன்புமணி, அலுவலர்கள் குமார், சுகந்தி, முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், செல்வம், ஆடின் மெடோனா, சுந்தர், அறிவழகன், அஜிதா கனி, மில்லர் ஆகியோர் செய்து இருந்தனர்.

ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News