அரசு கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
அரசு கல்லூரியில் 'நான் முதல்வன்' திட்டம் தொடக்க விழா
- கல்லூரி வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் குமார் வரவேற்றார்.
- நிறுவனம் கலந்து கொண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகளை எடுத்தனர்.
சீர்காழி:
சீர்காழி புத்தூர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கல்லூரி வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் குமார் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் வராண்டா எக்ஸெல் என்ற நிறுவனம் கலந்து கொண்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புகளை எடுத்தனர். நிகழ்ச்சியில் தமிழ் துறை தலைவர் சசிகுமார், வணிகவியல் துறை தலைவர் நாராயணசாமி, கணிதத்துறை தலைவர் சாந்தி, கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திகா, ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் சத்தியமூர்த்தி, ராஜேஸ்வரி, உடற்கல்வித்துறை இயக்குனர் பிரபாகரன், நூலகர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.