உள்ளூர் செய்திகள்

.

வெலகலஅள்ளி கிராமத்தில் கால்நடைகளுக்கு தீவனம் தயாரிக்கும் பயிற்சி

Published On 2022-06-12 14:50 IST   |   Update On 2022-06-12 14:50:00 IST
  • ெவலகலஅள்ளி கிராமத்தில் கால்நடைகளுக்கு தீவனம் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.
  • இதில் குறைந்த செலவில் தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டம், அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வெலகலஅள்ளி கிராமத்தில் கால்நடைகளின் தீவன மேலாண்மை-குறைந்த செலவில் தீவனம் தயாரிக்கும் முறைகள் குறித்த தொழில்நுட்ப விளக்க பயிற்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்தும், அதன் செயல்பாடுகள், கால்நடைகளின் தீவன மேலாண்மை & குறைந்த செலவில் தீவனம் தயாரிக்கும் முறைகள், கறவையின் உற்பத்தியில் கலப்பு தீவனம், உலர் தீவனம், ஊறுகாய் புல் தயாரிக்கும் தொழில்நு ட்பங்களை யும், அதன் முக்கியத்து வம் கறத்தும் விவசாயி களுக்கு எடுத்து ரைத்தார்.

கால்நடை மருத்துவர் டாக்டர் பிரபாவதி, கால்நடை களுக்கு தேவையான நல்ல தரமான தீவனங்கள், புண்ணாக்கு போன்ற புரதச் சத்துள்ள கலப்பு தீவனம், கால்நடை களை பராமரிக்கும் முறைகள், தானிய வகைகளை அரைத்து கொடுக்கும் முறைகள் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் விளக்கினார்.

கிருஷ்ணகிரி வேளாண்மை அலுவலர் எலிசபெத்மேரி, உழ வர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விளக்கம் அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் முத்துசாமி, தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுதல் குறித்து விளக்கினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகம் மற்றும் பார்வதி ஆகியோர் செய்திருந்தனர். 

Similar News