உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர்.

ஊத்தங்கரையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு

Published On 2022-06-17 16:01 IST   |   Update On 2022-06-17 16:01:00 IST
  • குற்ற நிகழ்வுகள் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
  • ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்படும்

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையொட்டி ஊத்தங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர் குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசும்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குற்ற நிகழ்வுகள் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள், குற்றவாளிகள் ஒருவரும் தப்ப முடியாது, பெண்கள், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. சங்கு. ஊத்தங்கரை டி.எஸ்.பி. அலெக்சாண்டர், ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன், அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் சோபா திருமால்முருகன், ஊத்தங்கரை வட்டாட்சியர் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்கள் மகேஸ்குமரன், சிவபிரகாசம், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மாலதி நாராயணசாமி, பேரூராட்சி தலைவர் அமானுல்லா, மற்றும் காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Similar News