உள்ளூர் செய்திகள்
உடுமலையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
- விநாயகர் கோவிலுக்கு வந்துவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
- வழக்கு பதிவு செய்து உடுமலை போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
உடுமலை :
உடுமலை யசோதா ராமலிங்கம்லே அவுட்டை சேர்ந்தவர் ராஜம்மாள்( வயது 80). இவர் காந்திநகரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு வந்துவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பைக்கில் வந்த இரண்டு பேர் அவருடைய கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு பைக்கில் தப்பிச் சென்றனர். இது குறித்து ராஜம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து உடுமலை போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.