மக்கள் குறைதீர்க்கும் முகாமில்166 மனுக்கள் பெறப்பட்டன
- கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது.
- கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 166 மனுக்கள் பெறப்பட்டன.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது.இதையொட்டி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 166 மனுக்கள் பெறப்பட்டன.
அதனை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் மனுக்களை பரிசீலனை செய்து உரிய
அலுவலர்களிடம் வழங்கி
நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார் .
இதை அடுத்து பல்வேறு துறைகளில் மொத்தம் 27 பயனாளிகளுக்கு 6 லட்சத்து 86 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்திரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி மணிமேகலை, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பிரபாகரன் உள்பட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.