உள்ளூர் செய்திகள்

தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு ஒத்திகை செய்த காட்சி.

அஞ்செட்டியில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி

Published On 2022-07-28 15:09 IST   |   Update On 2022-07-28 15:09:00 IST
  • பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
  • நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் குமார் தலைமை தாங்கினார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு துறையினர் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு நிலைய அலுவலர் தேவராஜன் மற்றும் தீயனைப்பு வீரர்கள் வருவாய் துறையினர் முன்னிலை வகித்தனர்.

பொதுமக்களுக்கு மழை வெள்ளம் மற்றும் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்பொழுது வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும்.

அதற்கான செயல்முறை விளக்கங்களை லைப் ஜாக்கெட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் மூலம் மீட்பு செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தனர்.

இதில் வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News