உள்ளூர் செய்திகள்

விவசாய கிணற்றில் நீச்சல் பழக சென்ற 2 மாணவர்கள் மூழ்கி பலி

Published On 2023-01-18 15:20 IST   |   Update On 2023-01-18 15:20:00 IST
  • மாமா சின்னசாமி என்பவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
  • 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி,

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் திருப்பதி வயது 19). இவர் டிப்ளமோ கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

திருப்பதி பொங்கல் பண்டிகையை கொண்டாட கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலபட்டியில் உள்ள தனது மாமா சின்னசாமி என்பவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று திருப்பதியும், அவரது மாமா மகன் ஹரிஹரன் (10) என்ற பள்ளி மாணவனுடன் செம்மங்குளி கோட்டையில் உள்ள சின்னசாமியின் விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கிணற்று நீரில் மூழ்கி திருப்பதி மற்றும் ஹரிஹரன் இருவரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஹரிஹரனின் தந்தை சின்னசாமி கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கிணற்றில் மூழ்கி உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நீச்சல் பழக முயன்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News