உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-11 10:04 GMT   |   Update On 2023-02-11 10:04 GMT
  • அரசு துறைகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
  • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தஞ்சாவூா்:

சமூக நீதி மறுக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். அரசு துறைகளைத் தனியார்ம யமாக்கும் முயற்சியைக் கைவிட செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

முடக்கப்பட்ட சரண் விடுப்பு, மறுக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை மீட்டெடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணியை தொடங்கினர்.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பேரணியை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோட்டத் தலைவர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். சங்கத்தின் மாவட்டச் செயலர் ரெங்கசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி, சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர்கள் தமிழ்வாணன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேரணியானது பனகல் கட்டிடம் முன்பு முடிவடைந்தது . பின்னர் அங்கு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News