உள்ளூர் செய்திகள்

மத்திய அரசின் பட்ஜெட் நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில், பட்ஜெட் நகல் எரித்து போராட்டம்

Published On 2023-02-11 10:18 GMT   |   Update On 2023-02-11 10:18 GMT
  • 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.29,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது.
  • பல்வேறு விவசாய திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியும் குறைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா்:

மத்திய அரசின் பட்ஜெட் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் உணவு மானியம் ரூ.1 லட்சம் கோடி குறைக்கப்பட்டதை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.29000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இது போல் பல்வேறு விவசாய திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியும் குறைக்கப்பட்டுள்ளது எனக் கூறி இன்று தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி தஞ்சை ரயிலடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் பக்கிரிசாமி, கோவிந்தராஜ், அன்பு உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டனர்.

பின்னர் அவர்கள் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோஷங்கள் எழுப்பியவாறே பட்ஜெட் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசார் எரிந்து கொண்டிருந்த நகலை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

Tags:    

Similar News