கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
தமிழகத்தில் கள் கலப்படத்தை காரணம் காட்டி தடை விதிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது
- அநியாயமாக கலப்படத்தை காரணம் காட்டி அந்த உரிமையை தமிழ்நாடு அரசு பறித்துக் கொண்டது.
- எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கள் இறக்குவதற்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும்.
கொடைக்கானல்:
தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கொடை க்கானலில் நிருப ர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறுகை யில், தமிழ்நாடு அரசிடம் கள் இறக்க அனுமதி வழங்கவும் கள்ளுக்கடை களை திறக்க கோருவதும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானவை என்று கூறுவது புரிதல் இன்மையின் வெளிப்பாடு ஆகும். 1950 ஜனவரி 26ஆம் தேதி அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது அந்த சட்டம் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமைதான் கள் இறக்குவதும், பருகுவதும்.
ஆனால் அநியாயமாக கலப்படத்தை காரணம் காட்டி அந்த உரிமையை தமிழ்நாடு அரசு பறித்துக் கொண்டது. பாண்டிச்சேரி, கேரளா, தெலுங்கானாவில் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் உலக அளவில் எங்கும் கள்ளுக்கு தடை கிடையாது. அங்கும் கலப்படம் செய்வார்கள். அதனை அந்த மாநில அரசுகள் தடுக்கும். ஆனால் தமிழ்நாட்டில் கலப்படத்தை கட்டுபடுத்தமுடியவில்லை என்று கூறி தடை விதிக்க ப்பட்டுள்ளது. கள் மருத்துவ குணம் கொண்டதாகும்.
ஜனவரி 21 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தைப்ப டுத்தப்படும். எங்களது உரிமையை பறித்துக் கொண்டார்கள் எனவும் இனிமேல் அந்த உரிமையை பறிப்பதற்கு விடமாட்டோம். கேரளாவில் கள்ளுக்கு தடை இல்லை. மதுபான கடைகளில் கள் விற்ப னையை டப்பா க்களில், பாட்டில்களில் , டின்களில் சந்தைப்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கள் இறக்குவதற்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். இந்தியாவில் உள்ள 8 கோடி பனை மரங்களில் 5 கோடி பனை மரங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. முக்கிய இடங்களில் கள் சந்தை படுத்தும் போது தமிழகத்துக்கு வருவாய் அதிகரிக்கும் என்றார்.