உள்ளூர் செய்திகள்
சூளகிரியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல்
- ஒரு நாளைக்கு 1000-க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள், பொதுமக்கள், புரோக்கர்கள் வந்து செல்கின்றனர்.
- வாகனங்களை அரசு விதிமீறி அங்கும் இங்குமாக நிறுத்தி செல்வதால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா பகுதியில் சிப்காட் அமைக்க இடம் தேர்வு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் நிலத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பால் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார், ஒரிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து தொழில் முனை வோர்கள் பல ஆண்டுகளாக குவிந்து வருகின்றனர்.
மேலும் சூளகிரியில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையில் பத்திரபதிவு அலுவலகங்கள் அதிக அளவில் உள்ளதால் நிலம் வாங்க, விற்க என ஒரு நாளைக்கு 1000-க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள், பொதுமக்கள், புரோக்கர்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் வாகனங்களை அரசு விதிமீறி அங்கும் இங்குமாக நிறுத்தி செல்வதால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.