உள்ளூர் செய்திகள்

சூளகிரி ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

சூளகிரி பகுதியில் ரூ.15 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பீட்டில் திட்ட வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை

Published On 2022-08-21 14:17 IST   |   Update On 2022-08-21 14:17:00 IST
  • சூளகிரி ஊராட்சியில் சுமார் ரூ.15 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பீட்டில் திட்ட வளர்ச்சி பணிகள்.
  • சூளகிரி ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியம்சூளகிரி ஊராட்சியில் சுமார் ரூ.15 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பீட்டில் திட்ட வளர்ச்சி பணிகளுக்கு சூளகிரிஊராட்சி மன்ற தலைவர் கலைசெல்விராமன் தலைமையில் சூளகிரி ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

சூளகிரி ஊராட்சியில் 15-வது நிதிக் குழு திட்டத்தின் கீழ் பேரிகை செல்லும் சாலை முதல் முனீஷ்வர் கோவில் வரை ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியும், காவல் நிலையம் எதிரில் உள்ள சலையில் ராமசந்திரன் வீடு வரை ரூ.7 லட்சத்தில் 32 ஆயிரமதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் ஆகிய பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் வட்டார வளர்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்னண், சிவக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் சங்கீதா, ரமேஷ், பொறியாளர் சியாமளா, ஊராட்சி மன்ற துனை தலைவர்வரலஷ்மி, ஊராட்சி கழக செயலாளர் வெங்கடேஷ், ஒப்பந்தார்ர் ராஜா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ்செல்வன், அர்சனா ஆனந்த், நாராயனம்மா, அப்சர், வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News