உள்ளூர் செய்திகள்

 சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆணையாளர் அசோகன் வாக்காளர் பட்டியலை கட்சியினரிடம் வழங்கினார்.

சூளகிரி ஒன்றியத்தில் புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு

Published On 2022-06-18 15:01 IST   |   Update On 2022-06-18 15:01:00 IST
  • சூளகிரி ஒன்றியத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
  • புகைப்படத்துடன் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சூளகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம்-சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள 4 ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது.

அதில் மேலுமலை கிராம ஊராட்சியில் வார்டு எண் 10, சூளகிரி கிராம ஊராட்சி வார்டு எண் 5, தியாகரசனப்பள்ளி ஊராட்சி வார்டு எண் 9, கொம்மேபள்ளி ஊராட்சி வார்டு எண் 9 ஆகிய காலி இடங்களுக்கு தேர்வு நடக்க உள்ளது.

இதனால் அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான வாக்காளர் புகைப்பட பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளரின் அறிவுரையின்படி சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி ஆணையாளர் அசோகன் அனைத்து கட்சியினர் முன்னிலையில் அந்தந்த ஊராட்சியினரிடம் புகைபடத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை வழங்கினார்.

இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், மூகிலன், அனைத்து கட்சி நிர்வாகிகள் கங்கப்பா, பாலசுப்பிரமணியன், குருபிரசாத் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News