சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சிஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு சிறப்பு கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
சூளகிரியில் உறுப்பினர்களுக்கு சிறப்பு கூட்டம்
- கழிவுநீர் கால்வாய் குறித்து பேசப்பட்டது.
- அடிப்படை வசதிகள் ஆகியவற்றை குறித்து விவாதிக்கப்பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்அசோகன், ஒன்றிய குழு தலைவர்லாவண்யா ஹேம்நாத், ஒன்றிய குழு துணைத் தலைவர்மாதேஷ்வரன்உறுப்பினர்கள்நாகேஷ்,ரத்னம்மா, யசோதா, லஷ்மம்மா , காஞ்சனாபாக்கியவதி, புஷ்பா,தமிழ்செல்வி மஞ்சுளா, சங்கீதா, லதா, வனீதா, முனிரத்தனா, வரதன்சேட்டு, ஹரிஷ், சீதாராமன், ஜனார்தன், ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள அடிப்படை வசதிளான குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை வசதி பிரச்சனைகள் மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்ட ஏற்பாடுகளை,மேலாளர் முகிலன், உமா சங்கர், மற்றும் பொறியாளர்கள் சுமதி, தீபமணி, ஆகியோர் செய்திருந்தனர்.