உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றபெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

சீர்காழியில், சதுரங்க போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு

Published On 2023-08-14 15:18 IST   |   Update On 2023-08-14 15:18:00 IST
  • குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.
  • பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 236 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

சீர்காழி:

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையால் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்ற சீர்காழி குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டியானது அண்மையில் நடைபெற்றது.

சீர்காழி எழில் மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் அரசு தொடக்கப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி மெட்ரிக் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளை சார்ந்த 236 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

சீர்காழி எழில் மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் விஜய் வரவேற்றார். சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி தலைமை வகித்தார். எழில் மலர் மெட்ரிக் பள்ளியின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைத்து போட்டிகளையும் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வின் முடிவில் சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார் போட்டியின் குறுவட்ட இணை செயலாளர் அரசு உயர்நிலைப்பள்ளி மேலச்சாலை உடற்கல்வி ஆசிரியர். சுந்தரவடிவேல், அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

Tags:    

Similar News