உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில் தேரோட்டம் முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகள்-போலீசார் ஆலோசனை

Published On 2022-06-11 05:17 GMT   |   Update On 2022-06-11 05:17 GMT
  • கொரோனா ஊரடங்குக்கு பின்தேரோட்டம் நடப்பதால், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்பர்.
  • அரிசிக்கடை வீதியில் கனரக வாகனங்கள் வந்து செல்ல கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென ஆலோசிக்கப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப்பெருமாள் கோவில்களின் தேரோட்டம் நாளை 12-ந்தேதி , நாளை மறுநாள் 13-ந்தேதி நடக்கிறது.இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் தமிழ்செல்வன், கோவில் செயல் அலுவலர் சரவணபவன், மாநகராட்சி அலுவலர்கள், போலீசார் மற்றும் சுகாதார அலுவலர்கள், மின்வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர்.

கொரோனா ஊரடங்குக்கு பின்தேரோட்டம் நடப்பதால், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்பர். எனவேபாதுகாப்பு பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். கழிப்பிட வசதி, குடிநீர் வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும்.தேரோட்டத்தை முன்னிட்டு, மாநகராட்சி நிர்வாகம் தேர்வீதிகளை சீரமைத்து கொடுக்க வேண்டும். மின்வாரியம், உரிய ஆய்வின் அடிப்படையில் மின் வினியோகத்தை மாற்றியமைக்க வேண்டும். அரிசிக்கடை வீதியில் கனரக வாகனங்கள் வந்து செல்ல 12, 13 -ந் தேதிகளில் கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

Similar News