உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் பொன்னங்குப்பம் ஊராட்சியில் புதிய தார் சாலை அமைப்பதற்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். அருகில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் உள்ளார்.

செஞ்சி ஒன்றியத்தில் ரூ. 2.23 கோடியில் புதிய தார் சாலை அமைக்கும் பணிஅமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்

Published On 2023-07-24 06:35 GMT   |   Update On 2023-07-24 06:35 GMT
  • ரூ 1.18 கோடி மதிப்பீட்டில்புதிய தார்சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா இன்று காலையில் நடைபெற்றது.
  • புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் பொன்னக்குப்பம் ஊராட்சியில் இருந்து சி. என். பாளையம் செல்லும் சாலையை முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 59.08 லட்சம்மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்ப தற்கும், துத்திப்பட்டு கிரா மத்தில் இருந்து இருளர் காலனி மயான பாதை செல்லும் சாலையை ரூ 46 லட்சம்மதிப்பீட்டில் தார்சாலையாகஅமைப்பதற்கும்,துத்திப்பட்டு முதல் கிருஷ்ணா புரம் வரை செல்லும் சாலையை ரூ 1.18 கோடி மதிப்பீட்டில்புதிய தார்சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா இன்று காலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழுதலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர்நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 2 கோடியே 23 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில்செஞ்சி மத்திய ஒன்றிய செயலாளர் விஜயராகவன், அனந்தபுரம் நகர செயலாளர் சம்பத், பேரூராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் அலுமேலுகிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் மங்கை முனுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபு சிங்,வனக்குழு தலைவர் நடராஜன்,அவை தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பழனி, நிர்வாகிகள் பிரதாப், முத்து, பாண்டியன், சுரேஷ், சரவணன் , அரசு ஒப்பந்த தாரர் சரவணன், செஞ்சி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பழனி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News