உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே உள்ள சிப்காட் பகுதியில் இறந்து கிடந்த வடமாநில லாரி டிரைவர் மனோஜ்.

போச்சம்பள்ளி சிப்கா்ட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை வடமாநிலங்களுக்கு ஏற்றி செல்ல வந்த லாரி ஓட்டுனர் திடீரென உயிரிழப்பு

Published On 2022-06-18 14:45 IST   |   Update On 2022-06-18 14:45:00 IST
  • வடமாநில டிரைவர் சிப்காட்டில் மர்மமாக இறந்தார்.
  • இதனால் மற்ற டிரைவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் இயங்கி வரும் ஓலா எலக்ட்ரிக் இரு சக்கர உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் இரு சக்கர வாகனங்களை வடமாநிலங்களுக்கு கன்டெய்னர் லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. இதற்காக 10-க்ற்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் சிப்காட் வளாகத்தின் அருகே உள்ள முருகன் கோவில் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் (45) என்ற ஓட்டுனர் தனது கன்டெய்னர் லாரியுடன் கடந்த 15-ம் தேதி வந்து அன்று முதல் காத்திருந்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் எழுந்து லாரியை சுத்தம் செய்துவிட்டு உள்ளே சென்றவர் நெடு நேரமாகியும் லாரி கேபினிலிருந்து வெளியே வரவில்லை. சகலாரி ஓட்டுனர்கள் மனோஜ் உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பதை கண்டு போச்சம்பள்ளி காவல் நிலையத்திறகு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் அங்கு சென்று விசாரனை மேற்கொண்ட போலீசார், பிரேதத்தை கைபற்றி தருமபுரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News