உள்ளூர் செய்திகள்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி நேரில் ஆய்வு செய்த காட்சி.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு: பாதிப்புக்குள்ளான 12 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கி வீடுகள் கட்டித்தரப்படும்- கிருஷ்ணகிரி கலெக்டர் தகவல்

Published On 2022-08-31 14:54 IST   |   Update On 2022-08-31 14:54:00 IST
  • முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு,.உடைகள் அளிக்கப்பட்டுள்ளது.
  • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 குடும்பத்தினருக்கு, மாற்று ஏற்பாடுகள் செய்து பசுமை வீடுகள் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

ஓசூர், 

ஓசூர் அனுமந்த நகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றங்கரையோரம் உள்ள 12 வீடுகளுக்குள்,2 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றதால், அந்த வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு முகாம்களுக்கு அழைத்துச் சென்றுதங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், போர்க்கால நடவடிக்கையாக அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டிக்கொண்டு உள்ள 10 முதல் 12 குடும்பத்தினருக்கு வருவாய் துறை மூலம் வேறு இடம் ஒதுக்கீடு செய்து வழங்கப்படும்.

மேலும் கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்று வெள்ளம் ஆற்றங்கரையில் ஏற்பட்டதில்லை. தாழ்வான பகுதியில் உள்ளவர்களை, முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு,.உடைகள் அளிக்கப்பட்டுள்ளது.

மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள 150 குடும்பங்களில் பெருமளவு பாதிப்புக்குள்ளான 12 குடும்பத்தினருக்கு, மாற்று ஏற்பாடுகள் செய்து வீட்டுமனை பட்டாக்கள் வழங்கி கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் அல்லது பசுமை வீடுகள் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது ஓசூர் சப்- கலெக்டர் . தேன்மொழி, தாசில்தார் கவாஸ்கர், ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பூபதி, மாநகராட்சிப் பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் காவல் துறை,வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Similar News