மனு அளிக்க வந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.
மோட்டூர் காலனியில் மாரியம்மன் கோவிலை பூட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- கிராம மக்கள், உதவி கலெக்டர் அலுவலகத்தில் மனு
- 90 குடும்பங்கள் எங்கள் தரப்பிலும், 10 குடும்பத்தினர் தனியாக உள்ளனர்.
- கோவிலை பூட்டிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடு்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா கனகமுட்லு அருகே உள்ள மோட்டூர் காலனி பகுதியை சேர்ந்த நாகராஜ், சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் உதவி கலெக்டர் அலுவலகம் வந்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் இந்த கிராமத்தில் வசித்து வருகிறோம். ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவோம். எங்கள் கிராமத்தில் மொத்தம் 100 குடும்பங்கள் உள்ளன. இதில் 90 குடும்பங்கள் எங்கள் தரப்பிலும், 10 குடும்பத்தினர் தனியாக உள்ளனர். அவர்கள் ஊரில் திருவிழாவின் போது தகராறு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 11.1.2022 அன்று எங்கள் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலை எதிர் தரப்பினர் பூட்டி விட்டனர்.
இது தொடர்பாக நாங்கள் கேட்ட போது தகராறு செய்தனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி கோவிலை பூட்டிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.