உள்ளூர் செய்திகள்

 முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கோபிநாத் பங்கேற்று, ஏழை, எளியோருக்கு இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கிருஷ்ணகிரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Published On 2022-06-20 15:34 IST   |   Update On 2022-06-20 15:34:00 IST
  • சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கோபிநாத் கலந்து கொண்டார்.
  • ஏழை, எளியோருக்கு இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில், காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி எம்பி.யின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு மாவட்ட துணைத் தலைவர் ரமகத்துல்லா தலைமை தாங்கினார்.

நகர தலைவர் லலித்ஆண்டனி, மாவட்ட பொதுச்செயலாளர் டாக்டர்.தகி, மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, ராகுல் பேரவை தலைவர் குட்டி(எ)விஜயராஜ், ஷனவாஸ், அஜிஸ்சுல்லா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் சதாம், கவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் அப்சல் வரவேற்புரையாற்றினார்.

இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கோபிநாத் பங்கேற்று, ஏழை, எளியோருக்கு இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரசார் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆஜித் பாஷா நன்றி கூறினார்.

Similar News