கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய செயலாளர் பதவிகளுக்கு போட்டியிட விருப்ப மனு வழங்கிய போது எடுத்த படம்.
கிருஷ்ணகிரியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் விருப்ப மனு
- உரிய கட்டணத்துடன் தங்களது விருப்பமனுக்களை வழங்கப்பட்டது.
- பர்கூர் சட்டமன்ற உறுப்பி னருமான மதியழகன் முன்னிலை வகித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க.வில் கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, பர்கூர் வடக்கு, தெற்கு, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வடக்கு, தெற்கு, மத்திய, காவேரிப்பட்டணம் கிழக்கு, மேற்கு, மத்தூர் வடக்கு, தெற்கு ஆகிய 12 ஒன்றியங்கள் உள்ளது.
இதில் ஒன்றிய அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிக்கான உட்கட்சி தேர்தல் நடைபெறுகிறது.
இந்த பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள், தலைமை கழகம் அளித்து மனுவை பெற்று, அதை பூர்த்தி செய்து, உரிய கட்டணத்துடன் தங்களது விருப்பமனுக்களை வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி வெங்க டேஸ்வரா காம்ப்ளக்சில் உள்ள சுபம் மகாலில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செங்குட்டுவன் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணை தலைவரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பி னருமான மதியழகன் முன்னிலை வகித்தார்.
இதில் தலைமை கழக பிரதிநிதியும், முன்னாள் எம்எல்ஏ.வுமான ரவிச்சந்திரன் பங்கேற்று, விருப்ப மனுக்களை பெற்றார். இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர் ராஜன், நகர செயலாளர் நவாப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.