உள்ளூர் செய்திகள்

நற்கருணை நாதரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம், ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதற்கு பூக்கள் தூவி வரவேற்ற காட்சி.

கிருஷ்ணகிரியில் நற்கருணை ஆராதனை பவனி

Published On 2022-06-20 15:27 IST   |   Update On 2022-06-20 15:27:00 IST
  • நற்கருணை ஆராதனையும் செய்து, இறை மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார்.
  • நற்கருணை நாதரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம், ஊர்வலம் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி சாந்தி நகரில் அமைந்துள்ள மாதா இருதய சபை கன்னியர் மடத்தில், நேற்று மாலை முதல் மேடை அமைத்து நற்கருணை ஆராதனை மற்றும் ஆசீர்வாதம் நடைபெற்றது.

பின்னர், நற்கருணை நாதரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம், ஊர்வ லமாக புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் அமைக்கப்பட்டிருந்த, இரண்டாவது மேடைக்கு கொண்டுவந்து, அங்கும் நற்கருணை ஆராதனையும், ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், பங்குத்தந்தை இசையாஸ், உலக நன்மைக்காவும், சமாதானத்திற்காகவும் சிறப்பு திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் செய்து, இறை மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார்.

இந்த சிறப்பு நற்கருணை பவனி மற்றும் ஆராதனையில் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Similar News