உள்ளூர் செய்திகள்
- கடந்த 21-ஆம் தேதி கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை.
- இவரது பெற்றோர்கள் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி- சேலம் மெயின் சாலை அவ்வை நகர் பகுதியில் சேர்ந்தவர் மாணவி. இவர் ஓரப்பம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 21-ஆம் தேதி கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரது பெற்றோர்கள் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் பெற்றோர் எனது மகளை சூர்யா என்பவர் கடத்திச் சென்றதாக புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.