உள்ளூர் செய்திகள்
சுதந்திர தின விழா முன்னேற்பாடுபணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
- சுதந்திர விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது
- மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரயு தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
வருகிற 15-ந் தேதி 76-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுதந்திர விழாவை கொண்டாடுவது குறித்து முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, உதவி கலெக்டர்கள் சரண்யா, பாபு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.