உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி நகராட்சியில் கழிவுநீர் கால்வாய் அைமக்கும் பணிைய நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
கிருஷ்ணகிரி நகராட்சியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி-நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
- கிருஷ்ணகிரி நகராட்சியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது.
- நகர்மன்ற தலைவர் தொடங்கிவைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சி 23-வது வார்டிற்கு உட்பட்ட பானக்கார தெருவில், புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் தலைமை தாங்கி, பூமிபூஜை செய்து, கால்வாய் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நகர்மன்ற உறுப்பினர் தேன்மொழி மாதேஷ், வட்ட பிரதிநிதி ராஜா, ஜெகநாதன், முனீர், ஜாவித்பாஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.