உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் தலைமையில் மதுபானங்கள் அளிக்கப்பட்ட காட்சி.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் அழிப்பு

Published On 2022-06-15 14:34 IST   |   Update On 2022-06-15 14:34:00 IST
  • கடந்த 2 மாதத்தில் 40 பேரை கைது செய்துள்ளனர்.
  • 287 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் மூலம் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 287 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு வனப்பகுதியையொட்டி கொட்டி போலீசார் அழித்தனர். மதுபானங்கள் அழிக்கும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்ட த்திற்கு கள்ளத்தனமாக மதுபானங்கள் வருவதை தடுத்து வருகிறோம். அடுத்த மாதம் 44 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் ஏலம் விடப்படும். இல்லாவிட்டால் அழிக்கப்படும். புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக கடந்த 2 மாதத்தில் 40 பேரை கைது செய்துள்ளோம். 13 குற்றவாளிகளின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளோம். தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசம் செய்வோரை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News