உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 63 பேர் கைது
- சட்டம் -ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்களை கைது செய்திட மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார்.
- 63 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் குற்ற வழக்குகளில் ஈடுபடுபவர்களையும், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து சட்டம் -ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்களை கைது செய்திட மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார்.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடியாக வேட்டை நடத்தி, பொதுமக்களுக்கு இடையூறாகவும், சட்டம் - ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக 63 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் கொலை, கொலை முயற்சி, அடி-தடி மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளும், வரலாற்று பதிவேட்டில் கண்காணிக்கப்படும் பழைய குற்றவாளிகளும் அடங்குவார்கள்.