உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் ராகுல்காந்தி பதவி பறிப்பை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

Published On 2023-03-27 09:48 GMT   |   Update On 2023-03-27 09:48 GMT
  • நாடு முழுவதும் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில்சத்தியாகிரக போராட்டம் நடந்தது.
  • கருப்பு துணியை வாயில் கட்டிக்கொண்டும், கறுப்பு சட்டை அணிந்தும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

கிருஷ்ணகிரி,

ராகுல்காந்தி பதவி பறிப்பை கண்டித்து கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்டகாங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு, அவதூறு வழக்கில்2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதையடுத்து, எம்பி பதவி பறிக்கப்பட்டது.இதனை கண்டித்து நாடு முழுவதும் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில்சத்தியாகிரக போராட்டம் நடந்தது.

அதன்படி, கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை எதிரில், கிழக்கு மாவட்டகாங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாநிலசெயலாளர் ஜே.எஸ். ஆறுமுகம், முன்னாள் மாவட்ட தலைவர்கள் காசிலிங்கம், நாராயணமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், எஸ்.சி. எஸ்.டி.பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுகசுப்பிரமணி உள்ளிட்டோர் முன்னிலைவகித்தனர்.

இதில் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்தும், அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கலந்து கொண்டவர்கள் கருப்பு துணியை வாயில் கட்டிக்கொண்டும், கறுப்பு சட்டை அணிந்தும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் பி.சி.சேகர்,

ரகமத்துல்லா, நகர தலைவர்(தெற்கு) லலித் ஆண்டனி, முபாரக் (வடக்கு), மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல், நிர்வாகிகள் யுவராஜ், ராஜேந்திரவர்மா, ஜாக்கப், கமலக்கண்ணன் விவேகானந்தன் ஜெயபிரகாஷ் வக்கீல் அசோகன்,வட்டாரத் தலைவர்கள் கல்லாவி ரவி, திருமால், மாது, ஜெயவேல், ஜேக்கப், நகரத் தலைவர்கள் யுவராஜ்,விஜயகுமார், தேவநாராயணன், விவேகானந்தன், செயலாளர் பாண்டுரங்கன், மடத்தனூர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News