உள்ளூர் செய்திகள்

காரைக்காலில் வீட்டு கதவை உடைத்து நகை ெகாள்ளை

Published On 2022-12-04 07:25 GMT   |   Update On 2022-12-04 07:25 GMT
  • மூத்த பெண் வாணிஸ்ரீக்கு கும்பகோணத்தில் திருமண ஆகி, விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.
  • கணவரிடம் விசாரித்தபோது, அவரும் கடந்த 3 தினங்களாக வீட்டுக்கு வரவில்லை.

புதுச்சேரி:

காரைக்கால் அருகே கோட்டுச்சேரி குப்புசெட்டி ச்சாவடி தெருவை சேர்ந்த வர் முருகேசன். கூலி வேலை செய்துவரும் இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த பெண் வாணிஸ்ரீக்கு கும்பகோணத்தில் திருமண ஆகி, விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இதனால், வாணிஸ்ரீ, தாய் வீட்டுக்கு வந்துள்ளார். தாய் வீட்டு பீரோவில், தனது தாலி செயின், நெக்லஸ், தங்ககாசு உள்ளிட்ட சுமார் 6.50 பவுன் தங்க நகைகளை வைத்திருந்தார். சம்பவத்தன்று , சீதாலட்சுமி வீட்டை பூட்டி சாவியை தனது கணவர்வசம் ஒப்படைத்துவிட்டு, காரைக்கால் அருகே அம்பகரத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு வந்து, கணவரிடம், சாவியை வாங்கி வீட்டை திறந்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 6.50 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் திருட்டு போய் இருப்பததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கணவரிடம் விசாரித்தபோது, அவரும் கடந்த 3 தினங்களாக வீட்டுக்கு வரவில்லை. இது குறித்து, சீதாலட்சுமி கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, தங்க நகைகளை திருடிசென்ற மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News