உள்ளூர் செய்திகள்
கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்ற காட்சி.
ஓசூரில் வித்யா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா
- கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
- சிறப்பு ஹோமங்களுடன் தொடங்கியது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் விகாஸ் நகர் பகுதியில் வித்யா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகள், கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்களுடன் தொடங்கியது.
தொடர்ந்து, யாகசாலை பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில் மாநகர எஸ்.ஏ.சத்யா கலந்து கொண்டார். மாநகராட்சி கவுன்சிலர்கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.