உள்ளூர் செய்திகள்
ஓசூரில் பைக்கில் கஞ்சா கடத்திய வட மாநில வாலிபர் கைது
- ரூ.25,000-மதிப்பிலான 2.5 கிலோ கஞ்சாவை, மோட்டார் சைக்கிளில் பெங்களூரில் இருந்து ஓசூருக்கு கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- கைது செய்து, கஞ்சா மற்றும் 50,000 ரூபாய் மதிப்பிலான மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் போலீசார், நேற்று மாலை ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், ரூ.25,000-மதிப்பிலான 2.5 கிலோ கஞ்சாவை, மோட்டார் சைக்கிளில் பெங்களூரில் இருந்து ஓசூருக்கு கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் அந்த வாலிபர், அசாம் மாநிலத்தை சேர்ந்த பிங்கு பயாஸ் (22) என்பதும், இவர் ஓசூர் ஜுஜுவாடி பகுதியில் தங்கியிருந்து, ஒரு தனியார் கம்பெனியில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து, கஞ்சா மற்றும் 50,000 ரூபாய் மதிப்பிலான மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.