உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில், தலித் விடுதலை கட்சியின் பொதுச்செயலாளர் செங்கோட்டையன் பேசியபோது எடுத்த படம்.

ஓசூரில் சமூகநீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில், ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-19 15:12 IST   |   Update On 2022-06-19 15:12:00 IST
  • கந்துவட்டி விவகாரத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மத்திய பா.ஜ.க.ஆட்சியில், தனிமனித பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது, மேலும் நிலைமை மிகவும் மோசமடையும் அபாயம் உள்ளது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்ட மற்றும் ஓசூர் மாநகர சமூகநீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில், தமிழக கவர்னரை, மத்திய அரசு திரும்ப அழைக்க கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓசூர் காமராஜ் காலனியில் நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, அமைப்பின் மாநில பொருளாளர் இல.சு.முத்துசாமி தலைமை தாங்கினார்.மாவட்ட, மாநகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இளைஞரணி மாநில தலைவர் ஜெகதீஷ் வரவேற்றார். இதில், தலித் விடுதலை கட்சியின் பொதுச்செயலாளர் எம்.பி.செங்கோட்டையன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட உரையாற்றினார். மேலும் சமூக நீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிறுவனர் இளவரசன், ஐ.பி.எப்.மாநில அமைப்பாளர் ராகவராஜ், சி.பி.ஐ.எம்.எல்.மாநிலக் குழு உறுப்பினர் சித்தானந்தம், உள்பட பலர் பேசினர்.. முன்னதாக, செங்கோட்டையன் நிருபர்க ளுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டிய மருத்துவத்துறை, இன்று பணம் ஒன்றே என்ற குறிக்கோளுடன் செயல்படுவதாக மாறி யுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கந்துவட்டி விவகாரத்தில், பாதிக்கப்படுபவர்கள் போலீசாரிடம் புகார் கொடுக்க இயலாத நிலையில் தான் அவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

கந்துவட்டி விவகாரத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது எங்களின் நோக்கம். மத்திய பா.ஜ.க.ஆட்சியில், தனிமனித பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது, மேலும் நிலைமை மிகவும் மோசமடையும் அபாயம் உள்ளது.

இந்தியாவின் பொருளா தாரம் மிகவும் பின்னடைவை சந்தித்து கொண்டிருக்கிறது". இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். பேட்டியின்போது, மாநில இணைசெயலாளர் சகுந்தலா தங்கராஜ், தலைமை நிலைய செயலாளர் மூர்த்தி, மண்டல செயலாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News