உள்ளூர் செய்திகள்

ஓசூரில்1,000 எலுமிச்சை மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி

Published On 2022-12-29 15:11 IST   |   Update On 2022-12-29 15:11:00 IST
  • மாநகராட்சி பூங்கா பகுதியில் 1,000 எலுமிச்சை மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
  • நிகழ்ச்சிக்கு, டைட்டான் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் ஆர்.ராஜகோபாலன் தலைமை தாங்கி எலுமிச்சை மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

ஓசூர்,

ஓசூர் மாநகராட்சியுடன், டைட்டான் கைகடிகார நிறுவனம் இணைந்து எலுமிச்சை மர பூங்கா - 1000 (நீம் டிரி பார்க்-1000) என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது.

இந்த திட்டத்தின் கீழ், ஓசூர் ராமநாயக்கன் ஏரி பின்புறம், மாநகராட்சி பூங்கா பகுதியில் 1,000 எலுமிச்சை மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, டைட்டான் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் ஆர்.ராஜகோபாலன் தலைமை தாங்கி எலுமிச்சை மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மேலும் இதனை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இதில் சிறப்பு விருந்தினராக, ஓசூர் அரிமா சங்க மூத்த தலைவர் ஒய்.வி.எஸ்.ரெட்டி கலந்து கொண்டு பேசினார். மேலும் நிகழ்ச்சியில், டைட்டான் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நிறுவன ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News