உள்ளூர் செய்திகள்
ஓசூரில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.
ஓசூரில், பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
- ராஜீவ் காந்தியை விசாரிக்க காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- ஓசூர், கிருஷ்ணகிரியில் போராட்டம் நடத்தினர்.
ஓசூர்,
மத்திய பா.ஜ.க. அரசு, பொய் வழக்கு போடுவதாக கண்டனம் தெரிவித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் காமராஜ் காலனி 2-வது கிராஸ் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.முரளிதரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் அன்வர், வீர.முனிராஜ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மேலும் இதில், மாவட்ட பொருளாளர் மகாதேவன், துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா, மஞ்சுளா மற்றும் மாவட்ட, மாநகர, வட்டார நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது மோடி அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.