உள்ளூர் செய்திகள்

ஓசூரில் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

Update: 2023-03-27 09:44 GMT
  • தனியார் மண்டபத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார்.
  • பூத் கமிட்டி அமைப்பது, உறுப்பினர் சேர்க்கை குறித்தும் அவர் ஆலோசனைகள் வழங்கினார்

ஓசூர்,

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம், ஓசூரில் நடைபெற்றது.

ஓசூர் - தளி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார்.

ஓசூர் மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா, மாவட்ட துணை செயலாளர் பி.முருகன், மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில், மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு, முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து விரிவாக பேசினார். மேலும், பூத் கமிட்டி அமைப்பது, உறுப்பினர் சேர்க்கை குறித்தும் அவர் ஆலோசனைகள் வழங்கினார். கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக, தி.மு.க. கொள்கைபரப்பு துணை செயலாளர்கள் ஆரணி அன்புவாணன், வேலூர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலும் இதில், மாநில இளைஞரணி துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன், மாநில விவசாய அணி துணைத்தலைவர் இன்பசேகரன், துணை மேயர் ஆனந்தய்யா, மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட, மாநகர நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News