உள்ளூர் செய்திகள்

ஓசூர் மின் வாரிய அலுவலத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனை கூட்டம்

Published On 2022-11-13 15:01 IST   |   Update On 2022-11-13 15:01:00 IST
  • மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
  • குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் உள்ள சுவிட்சுகளை தொடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஓசூர்,

ஒசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அவர் பேசுகையில் மின் வெட்டு ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என்றும், மின்கம்பம் மற்றும் மின் கம்பிகள் பழுது அடைந்திருந்தால் உடனே களத்தில் இறங்கி போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மழைக்காலங்களில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மின் கம்பிகள் சாலையில் கிடந்திருந்தால் உடனே மின் வாரியத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளில் எச்சரிக்கையாக செல்லவேண்டும். மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். அவற்றைத் தாங்கும் கம்பிகளில் கால்நடைகளை கட்ட கூடாது.

குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் உள்ள சுவிட்சுகளை தொடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்ட செயற் பொறியாளர் (இயக்கமும் பராமரிப்பும்) ஜெயபிரகாஷ் மற்றும் ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட ஓசூர் கோட்டத்தை சேர்ந்த மின் வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News