உள்ளூர் செய்திகள்

ஓசூரில், ஓடும் பஸ்ஸில் புகையிலை பொருட்கள் கடத்தல்

Published On 2022-08-28 14:11 IST   |   Update On 2022-08-28 14:11:00 IST
  • பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து சென்றனர்.
  • ஆசாமி போலீசை கண்டவுடன் தப்பி ஓடிவிட்டான்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது ஒசூரிலிருந்து பழனி செல்லும் பேருந்தில் 67 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை கடத்தி வந்த ஆசாமி போலீசை கண்டவுடன் தப்பி ஓடிவிட்டான்.

அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பிய ஆசாமியை தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.54,000 என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News