உள்ளூர் செய்திகள்

ஓசூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2023-02-08 15:32 IST   |   Update On 2023-02-08 15:32:00 IST
  • ஓசூர் துணை மின் நிலையத்தில், நாளை 9-ந் தேதி உயர் மின் திறன் கொண்ட கம்பிகள் மாற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வராது.

ஓசூர்,

ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஓசூர் துணை மின் நிலையத்தில், நாளை 9-ந் தேதி உயர் மின் திறன் கொண்ட கம்பிகள் மாற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை, ஓசூர் காமராஜ் காலனி, எம்.ஜி.ரோடு, அண்ணாநகர், ராம் நகர், நியூ ஹட்கோ, ஸ்ரீ நகர், பாகலூர் ஹட்கோ, ஆசிரியர் காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, அப்பாவு நகர், துவாரகா , முனீஸ்வர் நகர், மத்தம், ஆனந்த நகர், சாந்தபுரம், அரசனட்டி, சூர்யா நகர், பிருந்தாவன் நகர், அண்ணாமலை நகர், கிருஷ்ணா நகர், டைட்டான் இன்டஸ்ட்ரிஸ், அசோக் லேலண்ட் - 1, சிப்கார் ஹவுசிங் காலனி ( பகுதி நேதாஜி நகர், பாலாஜி நகர் (சின்ன எலசகிரி), டி.வி.எஸ்.நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்ஷிப், காடிபாளையம், குதிரே பாளையம், பழைய மத்திகிரி, எடையநல்லூர், சிவகுமார் நகர், கொத்தூர் கொத்தகண்ட பள்ளி,பொம்மாண்ட பள்ளி மற்றும் சுற்றுவட்டாரங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்".

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News