உள்ளூர் செய்திகள்

கூடலூரில் மகளை அரசு பள்ளியில் சேர்த்த ஆசிரியர் தம்பதி

Published On 2022-09-10 15:27 IST   |   Update On 2022-09-10 15:27:00 IST
  • முதல் மகள் அதே பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
  • பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனா்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம், தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமைஆசிரியராகப் பணியாற்றுபவா் கிருஷ்ணகுமாா். அத்தி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுபவா் ரேவதி.

தம்பதியான இவா்கள் கூடலூா் வண்டிப்பேட்டையிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள நாற்காலிகள் மற்றும் குடிநீா்த் தொட்டிகளை நன்கொடையாக வழங்கி தனது இரண்டாவது மகள் மகிழினியை முதல் வகுப்பில் சோ்த்தனா்.

அவா்களின் முதல் மகள் நிகரிலி அதே பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.அரசுப் பள்ளி ஆசிரியா்களான தம்பதி தங்களது குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சோ்த்ததை பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனா்.

Tags:    

Similar News